க/ மீரா மத்திய கல்லூரி

சிறுவர் தின விழா

எங்கள் பள்ளியின் 90வது ஆண்டு விழா

வருடாந்த சந்தை - 2024

slide 2.png
slide 2.png

அதிபர் செய்தி

திரு.ஜுனைதீன் முகமது அஷார்

கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் வெப்கொம் நிறுவனத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 'சைபர் லொவ பியாபத்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எமது பாடசாலைக்கான வலைத்தளத்தை உருவாக்கக் கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளமையை இட்டு பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

எமது வலயக்கல்வி பணிப்பாளரும் வலைத்தள உருவாக்கத்துக்கான சந்தர்ப்பத்தை வெப்கொம் நிறுவனத்தினர் எமக்கு அளிப்பதாக அறிவித்திருந்தார். அந்த வகையில் இதற்காக குறித்த காலப்பகுதியில் எமது பாடசாலை ICT பாடஆசிரியை மற்றும் 11 மாணவர்களும் பயிற்றுவிக்கப்பட்டனர். இதன் மூலம் எனது உருக்கொடுக்கக்கூடிய எண்ணங்களுக்கு பாடசாலைக்கான இணையத்தளத்தை மாணவர்கள் மூலம் உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை இட்டு பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

மாணவர்களை சைபர் உலகிற்கு பிரவேசிக்க உதவிய கல்வி அமைச்சு,வெப்கொம் நிறுவனத்தினர் மற்றும் எமது பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தினருக்கும் எனது நன்றியை காணிக்கை ஆக்குகின்றேன்.

திரு.ஜுனைதீன் முகமது அஷார்
அதிபர்
க/ மீரா மத்திய கல்லூரி.