க/ மீரா மத்திய கல்லூரி

வரலாறு

சிறுவர் தின விழா

எங்கள் பள்ளியின் 90வது ஆண்டு விழா

வருடாந்த சந்தை - 2024

slide 2.png
slide 2.png

பாடசாலை அறிமுகம்
க/மீரா மத்திய கல்லூரி, உகுரஸ்ஸப்பிட்டிய

 


கண்டி நகருக்கு மிகவும் அருகாமையில் அமைந்துள்ள முஸ்லிம் கிராமங்களில்      ஒன்றான உகுரஸ்ஸப்பிடியாவின் மையமாக் மீரா மத்திய கல்லூரியானது   அமைந்துள்ளது.
 

1934 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் திகதி 74 ஆண் மாணவர்களுடன்  ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரிக்குத் தேவையான காணியினை மர்ஹூம் மீரா    சாஹிப்  அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியின் முதல் அதிபராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு.பொன்னையா  அவர்கள் கடமையாற்றிவுள்ளதுடன் எமது பாடசாலையில் 1940 ஆண்டிலேயே பெண்மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மீரா மத்திய கல்லூரியானது 1961 ஆம் ஆண்டு மஹா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டதுடன் 1994 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி கௌரவ அமைச்சர் (கலாநிதி) மர்ஹூம் யு.ஊ.ளு.ஹமீட் அவர்களின் பங்களிப்புடன் மத்திய கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரை எமது கல்லூரியில் கல்வி கற்றோர்களில் அதிகமானோர் அதிபர்களாகவும்,ஆசிரியர்களாக, மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களாகவும் கடமையாற்றி வந்துள்ளதுடன் மேலும் எமது பாடசலையில் கல்வி கற்ற அதிகமான பட்டதாரிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசாங்க துறையிலும் தனியார் துறையிலும் சேவையாற்றி வருகின்றனர். அதே போல் எமது கல்லூரியில் ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்த பின் வேறு பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்றவர்கள் வைத்தியதுறையிலும், சட்டத்துறையிலும், தனியார் துறைகளிலும் மற்றும் வியாபாரத்துறைகளிலும் பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

1ஊ தரமான எமது கல்லூரியில் இன்று 500 க்கு அதிகமான மாணவர்கள் கல்வி கற்பதுடன் 33 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர். ஓவ்வொரு வருடமும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சராசரியாக 5க்கு மேற்பட்ட மாணவர்கள் சித்தியடைவதுடன் G.C.E.(O/L), (A/L) பரீட்சைகளிலும் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் வளர்ச்சிக்காக பாடசாலை ஆசிரியர்கள் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகின்ற அதே நேரம் பாடசாலை அபிவிருத்திக்குழு, பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் கல்லூரியின் வளர்ச்சிக்காக மிகவும் பாடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எமது பாடசாலையில் நிவர்;த்தி செய்யப்படாத பல குறைபாடுகள் காணப்பட்ட பொழுதிலும் இவ்வரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள “லகம பாசல ஹொதம பாசல” எனும் செயற்றிட்டத்தினூடாக அத்தேவைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளமையிட்டு பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.

இருப்பினும் எமது மாணவர்களின் விளையாட்டுத்துறையினை மேலும் வளர்ச்சியடைய செய்ய எமக்கு ஒரு மைதானம் இல்லாமை பெரும் குறையாகவே காணப்படுகின்றது எனினும் ஏதிர்காலத்தில் எமது பாடாசலை மேலும் ஒரு சிறந்த பாடசாலையாக உருவாகுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என பிராத்தித்து விடை பெறுகின்றேன்.